kalaimagalacademy56@gmail.com
விவேகானந்தர் என்னும் பேரொளி
இந்தியா ஆன்மீகவாதிகள் நிறைந்த சொர்க்கம். இங்கு ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வசிப்பதை நம்மால் உணர முடியும். அதில் சில ஜீவ முக்தர்கள் பேரொளியாக தோன்றுவது இயல்பு. உலக ஆன்மிகம் என்னும் நதிக்கு வழித்தடம் அமைத்தவர். ஜனவரி 12 , 1883 இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றான கொல்கட்டாவிலிருந்து ஆன்மீக சூரியன் உதயமானது.. பயணம் நீண்டது. கடவுளை காண ஆசை கொண்டு தேடிய அவரது ஆன்மாவிற்கு ஆள் காட்டி விரலாக வந்து நின்றது குருவி கருணை. கடவுளை கண்டார் ராமகிருஷ்ண பரமஹம்சர் உருவில். குருவருள் கிட்டியது. 1893 ல் ஆன்மீக நறுமணம் அமெரிக்கா வரை பரவத் தொடங்கியது. அந்த நறுமணமானது ஒட்டு மொத்த இந்தியாவின் உள்ளார்ந்த குணத்தை வெளிப்படுத்தியது. ' சகோதர சகோதிரிகளே ' என்ற வாசகமானது அரங்கை அதிர செய்தது. அதுவே உலக ஆன்மீகத்தின் தொடக்க நாள்.
மனிதனுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வார்த்தைகளை சொல்வதில் வல்லவர். ஆன்மீக தாகத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கு அவரது வார்த்தைகள் திடமான நம்பிக்கையும் ஆழமான சிந்தையையும் தரும்.
Comments
Post a Comment