kalaimagalacademy56@gmail.com உலகமே ! எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இங்கே ஓர் சூரியன் மலராதா ? என .. அந்த சூரியன் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவானது அதோ மலர்ந்தது . அன்றைய நாள் அஷ்டமி திதி. நல்ல நாள் அல்ல . சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்தச் சூரியன் இருளிலே உதித்தது. எப்படியாவது அந்த சூரியனை அஸ்தமிக்க செய்ய வேண்டும் என்பது எதிர் தேசத்து ஹம்சன் எண்ணம். ஆனால் கண்ணனின் சேவை பிருந்தாவனத்துக்கு தேவை. அவ்வளவு பிரகாசம் எனினும் இருள் சூழ்ந்து தான் இருந்தது அந்தச் சூரியனை. மலர்ந்த சூரியனை இடம் மாற்றி வைக்கத் தூண்டினர். இடம் மாற்றப்பட்ட சூரியன் அதோ பிருந்தாவனத்தில் ஒளிர்கிறது. அந்த சூரியன் இப்போது நந்த கோபன் கைகளில். நந்த கோபனுக்கு மகன் என்றால் சும்மாவா ? அங்கே நவமணிகள் சூழ்ந்து கொண்டு மேனியை வெளிக்காட்டா வண்ணம் அலங்கரித்தது. இருப்பினும் அந்த இடையனுக்கு பசுவின் மேல் அவ்வளவு ஆர்வம் ... பாலென்ன ? நெய்யென்ன ? அதோ சொன்னாளே ஆண்டாள் பிராட்டி பாலுண்ணோம் ! நெய்யுண்ணோம் என்று . பாலும் நெய்யும் ஆறாய் ஓடினால் எப்படி உண்ணத் தோணும் நமக்கு எவ்வளவு உண்ணத் தோணும். அழகழாய் கன்றுகளை ஈன்ற போதிலும் பால...