kalaimagalacademy56@gmail.com
உலகமே ! எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இங்கே ஓர் சூரியன் மலராதா ? என .. அந்த சூரியன் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவானது அதோ மலர்ந்தது . அன்றைய நாள் அஷ்டமி திதி. நல்ல நாள் அல்ல . சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்தச் சூரியன் இருளிலே உதித்தது. எப்படியாவது அந்த சூரியனை அஸ்தமிக்க செய்ய வேண்டும் என்பது எதிர் தேசத்து ஹம்சன் எண்ணம். ஆனால் கண்ணனின் சேவை பிருந்தாவனத்துக்கு தேவை. அவ்வளவு பிரகாசம் எனினும் இருள் சூழ்ந்து தான் இருந்தது அந்தச் சூரியனை. மலர்ந்த சூரியனை இடம் மாற்றி வைக்கத் தூண்டினர். இடம் மாற்றப்பட்ட சூரியன் அதோ பிருந்தாவனத்தில் ஒளிர்கிறது. அந்த சூரியன் இப்போது நந்த கோபன் கைகளில். நந்த கோபனுக்கு மகன் என்றால் சும்மாவா ? அங்கே நவமணிகள் சூழ்ந்து கொண்டு மேனியை வெளிக்காட்டா வண்ணம் அலங்கரித்தது. இருப்பினும் அந்த இடையனுக்கு பசுவின் மேல் அவ்வளவு ஆர்வம் ... பாலென்ன ? நெய்யென்ன ? அதோ சொன்னாளே ஆண்டாள் பிராட்டி பாலுண்ணோம் ! நெய்யுண்ணோம் என்று . பாலும் நெய்யும் ஆறாய் ஓடினால் எப்படி உண்ணத் தோணும் நமக்கு எவ்வளவு உண்ணத் தோணும். அழகழாய் கன்றுகளை ஈன்ற போதிலும் பாலெண்ணவோ அந்த கண்ணனுக்கு தான் . இப்பொழும் அப்படித்தான் நாம் வாழ்கிறோம் . பச்சைப் புற்களை மேய விட்டு பக்குவமாய் வளர்த்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கே ஓர் இறைச்சல் கண்ணா , கண்ணா என்று அலறிய கூட்டம் . அங்கே நடப்பதைப் பார்க்க விரும்பியவன் வெளி வந்தான் எதிர் தேசத்து ஹம்சன் ஆம் நாம் அவனை வர்ணிக்காமல் இருக்க முடியாது. காரணம் அவன் எண்ணம் அப்படி. (பின்னர் தெரிவிக்கிறேன் ). மத யானையை போலல்லவா உருவம். ஆச்சர்ய பட
வைக்கும் உருவம். என்ன செய்தான் என்ற தோணியில் . கவர்ந்து விட்டான் நமது பசுக்களை என்றனர்
செய்வதறியாது திகைத்தான் கண்ணன் . மயங்கிய மனம் புல்லாங்குழலில் வாசிப்பைத் தொடர்ந்தது . வாசிப்பின் அழுத்தம் காடு முழுக்க பரவிட , அந்த கானம் எதிர் தேசத்து ஹம்சனின் பசுத் தொழுவத்தை அடைய , பசுக்களோ காக்க நம் கண்ணன் இருக்கின்றான் என்ற நிம்மதிப் பெருமூச்சில் கானத்தோடு சேர்ந்து காற்றும் நடனமாடியது. எதிர்த்திசையில் ஹம்சனின் சேவகன் இந்தப் பசுக்களை என்ன செய்வது என்று குழம்ப ஹம்சனோ பசுக்களுக்கு சேவை செய்ய பணியாளை நியமிக்கிறான். எதிர் தேசத்து மன்னன் எனினும் நேசிக்கிறான் பசுக்களை . ஒரு புறம் கண்ணன் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் வேளையில் கண்ணில் பட்டது ஒரு பூ. அறியும் ஆவலில் என்னவென்று கேட்க இது வெட்ச்சிப் பூ என்று சொல்ல தகவல் அறிகிறான். அது போருக் காகவே பூக்கின்ற பூ . பூவைச் சூடினான் கண்ணன். போர் தயாரானது. போருக்கான முதல் ஆயத்தம். போரில் வென்றது கண்ணனின் படை . பசுக்களும் மீட்கப்பட்டது . நலம் விசாரித்தான் கண்ணன். பசுக்கள் அவனின் சேவையை விவரிக்கத் தொடங்கின. கண்ணா ஹம்சன் எங்களைக் கவர்ந்து , பேணி , அடைந்து , பகுத்து , வணங்கி என்னும் ஐந்து சேவைகளை செய்தான் என சேவையை விவரித்தன. வெட்சியின் ஒழுக்கத்தை பேணிய ஹம்சனை எண்ணினான் கண்ணன், பசுக்கள் இடையர் குலத்தின் சொத்து கவர்ந்ததை எண்ணி வருந்தினான் ஹம்சன்.
கரந்தையோடு அடுத்த பயணம் தொடரும்
Comments
Post a Comment